×

வில்லங்க படங்களுக்கு எதிரா பொதுநல வழக்கு: பாக்யராஜ் கோபம்

சரத்குமார் நடித்த வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய வித்யாதரன் என்கிற ஆர்கேவி இப்போது இயக்கி உள்ள படம் கடைசி காதல் கதை. புகழ், பிரியங்கா வெங்டேஷ், ஷாலு ஷம்மு உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு கே.பாக்யராஜ் பேசியதாவது:
கொரோனாவிற்கு பிறகு தியேட்டர் திறக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன்.

ஆனால், இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. என்றார்.

Tags :
× RELATED கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் பர்ஸ்ட் லுக் வெளியீடு